[go: up one dir, main page]

Google Home

4.1
2.7மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google Nest, Google Wifi, Google Home, Chromecast சாதனங்கள், ஆயிரக்கணக்கான இணக்கமான கனெக்டட் ஹோம் தயாரிப்புகள் (லைட்டுகள், கேமராக்கள், தெர்மோஸ்டாட்டுகள் மற்றும் பல) ஆகிய அனைத்தையும் Google Home ஆப்ஸ் மூலம் அமைக்கலாம் நிர்வகிக்கலாம் கட்டுப்படுத்தலாம்.

லைட்டுகளை இயக்கலாம், தெர்மோஸ்டாட்டை மாற்றியமைக்கலாம் அல்லது முன்புறக் கதவின் அருகில் ஒரு நபரோ பேக்கேஜோ இருக்கும்போது விழிப்பூட்டலைப் பெறலாம். கட்டுப்பாடுகளையும் மேம்பாடுகளையும் நாங்கள் தொடர்ந்து சேர்த்து வருவதால் Wear OSஸில் Google Home ஆப்ஸ் முன்னோட்டப் பதிப்பாகக் கிடைக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவற்றை ஒரே இடத்தில் பார்க்கலாம்.
நீங்கள் அதிகம் செய்யும் செயல்களுக்கான ஷார்ட்கட்டுகளை (இசையைப் பிளே செய்தல், திரைப்படத்தைத் தொடங்கும்போது லைட்டுகளை மங்கலாக்குதல் போன்றவை) முகப்புப் பிரிவில் சேர்க்கலாம். ஒன்று அல்லது இரண்டு முறை தட்டி இவை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம், விரும்புபவற்றை விரைவாகப் பெறலாம். வீட்டின் முக்கியமான நிகழ்வுகளை 'ஊட்டம்' பிரிவு ஒரே இடத்தில் ஹைலைட் செய்து காட்டும். இங்கே உங்கள் சாதனங்களில் இருந்து மேலும் பலன்களைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிவதோடு உங்கள் வீட்டின் அமைவையும் மேம்படுத்தலாம்.

இணக்கமான லைட்டுகளை இயக்கவும் வானிலையைத் தெரிந்துகொள்ளவும் செய்திகளைப் பிளே செய்யவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உங்களை அனுமதிக்கும் வழக்கங்களை ஒரு எளிய கட்டளை மூலம் உருவாக்கலாம்.

செயலிலுள்ள ஆடியோ & வீடியோ ஸ்ட்ரீம்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் உங்களின் இணக்கமான வீட்டுச் சாதனங்களில் பார்க்கலாம், ஒலியளவை மாற்றலாம், அடுத்த டிராக்கிற்குச் செல்லலாம் அல்லது அவை ஒலித்துக்கொண்டிருக்கும் ஸ்பீக்கர்களுக்கு இடையே விரைவாக மாறலாம்.

வீட்டில் நடப்பவற்றை உடனடியாக அறியலாம்.
உங்கள் வீட்டின் நிகழ்வுகளையும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றிய அறிவிப்புகளையும் உங்களுக்கு வழங்கும் விதத்தில் Google Home ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் உங்கள் வீட்டைக் கண்காணிக்கலாம் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளின் ரீகேப்பைப் பார்க்கலாம். வீட்டில் இல்லாதபோது ஏதேனும் முக்கியமான நிகழ்வு நடந்தால் அதுகுறித்த அறிவிப்பையும் நீங்கள் பெறலாம்.

Google Home ஆப்ஸைப் பயன்படுத்தி Nest Wifi, Google Wifi ஆகியவற்றை ஒருசில நிமிடங்களில் அமைக்கலாம். வேகத்தைப் பரிசோதித்துப் பார்க்கலாம், விருந்தினர் நெட்வொர்க்கை அமைக்கலாம், வைஃபை கடவுச்சொல்லைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாகப் பகிரலாம். பிள்ளைகளின் ஆன்லைன் நேரத்தை நிர்வகிக்க பெற்றோர் கட்டுப்பாடுகளை (வைஃபை இடைநிறுத்தம் போன்றவை) பயன்படுத்தலாம். வீடியோ கான்ஃபிரன்ஸிங்கிற்கும் கேமிங் டிராஃபிக்கிற்கும் தானாகவே முன்னுரிமை வழங்குமாறு அனைத்துச் சாதனங்களிலும் அமைக்கலாம் அல்லது அனைத்து வகையான டிராஃபிக் வகைகளுக்கும் எந்தெந்தச் சாதனங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம். நெட்வொர்க் தொடர்பான கூடுதல் புள்ளிவிவரங்களைப் பெறலாம் (நெட்வொர்க்கில் ஒரு புதிய சாதனம் இணையும்போது வரும் அறிவிப்புகள், மோசமான இணைய இணைப்பைச் சரிசெய்வதற்கான விரிவான புள்ளிவிவரங்கள் போன்றவை).

தனியுரிமையைப் பாதுகாக்கும் வீடே உதவிகரமானது.
உலகின் சிறந்த பாதுகாப்புக் கட்டமைப்புகள் மூலம் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. Google தயாரிப்புகளில் இவற்றை நாங்கள் நேரடியாக உருவாக்குவதால் இயல்பாகவே இவை உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கின்றன. Google கணக்கில் உள்ளமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அச்சுறுத்தல்கள் உங்களைப் பாதிக்கும் முன்பே தானாகக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்படி தனியுரிமைக் கருவிகளை உருவாக்குகிறோம்.
Google Assistantடிடம் கேட்கப்பட்டவை, தனியுரிமை அமைப்புகள், தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளை நீங்களே கட்டுப்படுத்தலாம். உங்கள் செயல்பாடுகளைப் பார்க்கலாம், அவற்றை நீங்களே நேரடியாக நீக்கலாம் அல்லது தானாகவே நீக்கும்படி தேர்வுசெய்யலாம். உங்கள் குரல் மூலம் Google Assistantடில் உங்கள் தனியுரிமையைக் கட்டுப்படுத்தலாம். “எனது தனியுரிமை அமைப்புகளை எங்கு மாற்றலாம்?” போன்ற கேள்விகளைக் கேட்டு, தனியுரிமை & பாதுகாப்பு குறித்த மிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம்.

உங்கள் தகவல்களை எப்படிப் பாதுகாக்கிறோம் & உங்கள் தனியுரிமையை எப்படி மதிக்கிறோம் என்பது குறித்து மேலும் அறிய, safety.google/nest எனும் தளத்திற்குச் சென்று Google Nest பாதுகாப்பு மையத்தைப் பாருங்கள்.

* சில தயாரிப்புகளும் அம்சங்களும் சில பகுதிகளில் கிடைக்காமல் போகலாம். சாதனங்கள் இணக்கமானவையாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஏப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
2.55மி கருத்துகள்
Sambasivam S
18 ஏப்ரல், 2024
Dhineshkumar
இது உதவிகரமாக இருந்ததா?
Ramesh K (GK tailor)
9 ஏப்ரல், 2024
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
m Raja
21 ஜனவரி, 2024
சூப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

இந்தப் புதுப்பிப்பில் புதியவை:
பிழைதிருத்தங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.